Articles
-
கனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ் புதினங்கள்
குரு அரவிந்தன் 31-05-2014 இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில்
-
புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!
வ.ந.கிரிதரன் புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி…. இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக
-
ஜெயகாந்தனிற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை
அருண்மொழிவர்மன் ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் பிற எவரும் பெற்றிராத அளவுக்கு பிரபல்யத்தையும், பெரும் ரசிகர் கூட்டத்தினையும் பெற்றிருந்தவர். படைப்பிலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் அரசியல், திரைப்படம் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர். வரலாற்றில் ஜெயகாந்தன் என்கிற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் பேசப்படுகின்ற விடயங்களூடாகவும் ஜெயகாந்தனின் இந்தப் பன்முக ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். நான் மிகச் சிறுவனாக இருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியிருந்தார். அதன்பின்னர் அவரது மீள் பிரவேசம் நிகழ்ந்தாலும் அது தொடர்ச்சியான இயக்கமாக இருக்கவில்லை.
-
வாழ்த்துரை ஆசியுரை – கவிஞர் கந்தவனம்
(25.10.2014 சனிக்கிழமை மெய்யகத்தில் துரந்தை தமிழ்ச்சங்க உறுப்பினருக்கு ஆற்றிய உரை.) வாழ்த்துரை என்பதும் ஆசியுரை என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், வாழ்த்துரை தமிழ்ச்சொல் ஆசியுரை தமிழ்ப்படுத்தப்பெற்ற வடமொழிச் சொல். வடமொழியில் வேதங்களையும் மந்திரங்களையும் ஓதிவருகின்றவரும் மணிப்பிரவாள நடையில் இன்றும் தமிழ்ப் பேசுகின்றவருமாகிய அந்தணருக்கு ஆசியுரை என்றும் மற்றும் எம்போன்றவருக்கு வாழ்த்துரை என்றும் ஒரு மரபு கனடாவில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தணர; தமது ஆசியுரையில் இறையருளைத் தவறாது வேண்டுவர;. வாழ்த்துரை இறையருளை வேண்டியும் வேண்டாமலும்
-
அருணகிரியும் அகச்சான்றுகளும்
பேராசிரியர் சு.பசுபதி 1. அறிமுகம் அருணகிரிநாதரின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பொதுவாக மூன்று கோணங்களில் அணுகலாம் : அவை 1) செவிவழிக் கதைகள், அவற்றைக் கேட்ட முருகதாச சுவாமிகள் போன்ற பலரின் பிற்கால எழுத்துகள் 2) அகச்சான்றுகள் 3) கோவில் கல்வெட்டுகள், சாஸனங்கள், வடமொழி நூல்கள் ஆகியவற்றின் துணையுடன் செய்யும் சரித்திர ஆராய்ச்சி. அகச்சான்றுகள் மூலம் அருணகிரியின் சில வரலாற்றுக் குறிப்புகளை ஆய்வதே இக்கட்டுரையின் மைய நோக்கம். இதற்கு ஓர் அடிப்படைத் தற்கோள் ( assumption ) அவசியமாகிறது.
-
அகத்திணைமரபு- தலைமக்கள் ஆவாh; யாh;?
திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ் உலக இலக்கியங்களிலேயே மிகவும் வித்தியாசமானதும் வேறு எங்கும் காணப்படாததுமான இலக்கியமரபு தமிழ் அகத்திணை மரபாகும். அதன் பொதுமை காரணமாக இன்றும் வாழும் தன்மை வியத்தற்குhpயது. இந்த அகத்திணை மரபை எமக்குக் காத்துத் தந்த பெருமையின் பெரும் பங்கு தொல்காப்பியருக்கு உhpயது. தொல்காப்பியருக்குப் பன்னெடுங் காலங்களுக்கு முன்பிருந்தே இம் மரபு வழக்கிலிருந்து வந்திருக்கிறது. ஆனால் அவற்றை அனுபவிக்கும் பலன் தான் எமக்குக் கிடைக்காமலே போய்விட்டது. இன்று எமக்குக் கிடைக்கும் தமிழ் நுhல்களுள் காலத்தால் மிகப்
-
தமிழ் நாவல் இலக்கியம்
(கனடா தமிழ்ச் சங்கத்தில் 31-05-2014அன்று நிகழ்த்தப்பட்ட உரை) தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர;ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார; நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர;ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பு+ரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர;த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது.





